வெளிநாட்டு புலனாய்வு போதும், வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கக் கூடாது- மகிந்த

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், வெளிநாட்டவர்களை அனுமதிக்காமல், சிறிலங்கா இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டை மாநகர சபையின் மண்டபத்தில் நடந்த கூட்டு மேநாள் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் புலனாய்வை மாத்திரமே நாம் பெற வேண்டும். எமது நிலங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.

30 ஆண்டுப் போரில், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா வெளிநாட்டு உதவிகளை மாத்திரமே பெற்றது. வெளிநாட்டுப் படையினரை பயன்படுத்தவில்லை.

இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான திறமைவாய்ந்தவர்கள் என்று எமது படையினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!