தொடர் குண்டுத் தாக்குதல் ; இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

தலைநகர் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைத்த மூவர் கொண்ட குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தககுதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள், அதனுடன் தொடர்புடைய வேறு காரணிகள், உள்ளிட்ட விடயங்கள் இக் குழுவால் முதற்கட்டமாக ஆரய்ப்பட்டுள்ளன.

இந்த குழுவானது பாதுகாப்பு செயலாரக இருந்த ஹேமசிரி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மேலும் உளவுத்துறை முக்கியஸ்தர்கள் என பலரிடம் வாக்கு மூலம் பெற்று இந்த அறிக்கையை தயார் செய்துள்ளதாக அரிய முடிகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!