பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்க மறுத்த சிறிலங்கா அதிபர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

கடந்த 30ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அவரது இல்லத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, கபீர் காசிம், மலிக் சமரவிக்ரம ஆகியோர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இதன்போதே, நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபரிடம், ரணில் விக்ரமசிங்க கோரியிருந்தார்.

எனினும், சிறிலங்கா பிரதமரின் இந்தப் பரிந்துரையை சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார்.

தாமே, சட்டம் ஒழுங்கு அமைச்சின் நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!