சந்தேக நபர்களை விசாரணை செய்ய மேலதிக அதிகாரம் கேட்கிறது சிறிலங்கா இராணுவம்

கைது செய்யப்படும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை நடத்துவதற்கு, இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரியிருக்கிறார்.

“தற்போது, சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யும் சந்தேக நபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களை விசாரணை செய்யும் அதிகாரத்தை நாங்கள் கேட்கிறோம்.

ஏனென்றால், கைது செய்யப்பட்டவுடன், அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறுவது நல்லது என நாங்கள் நினைக்கிறோம்.

இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!