சீனாவில் தொற்று நோய்களுக்கு ஒரே மாதத்தில் 1859 பேர் பலி

சீனாவில் காசநோய், பால்வினை நோய் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் 1859 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சீனாவின் பல பகுதிகளில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்க தனி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வாந்திபேதி மற்றும் எலிக் காய்ச்சல் மிக மோசமான தொற்று நோய்களாக கருதி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவைதவிர, ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உண்டாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் ஆகிய தொற்று நோய்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 8 லட்சத்து 79 ஆயிரத்து 800 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில் சிகிச்சை பனின்றி 1859 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப கட்டுபாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!