வெளிநாடு செல்ல முயன்ற ஹிஸ்புல்லாவை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி!

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் மலேசியப் பயணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தியுள்ளார். கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா மலேசியாவுக்கு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். பயண ஒழுங்குகள் அனைத்தும் சரியான பின்னர், ஜனாதிபதியின் அனுமதிக்காக அவரது பயண விவரம் சென்ற போது அதற்கு ஜனாதிபதி அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. ஐ.ஸ் பயங்கரவாத அமைப்புடன் ஹிஸ்புல்லாவிற்கு தொடர்பிருப்பதாகவும் அவரை பதவியிலிருந்து விலக கோரி பல்வேறு தரப்பினராலும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!