நியூசிலாந்து பிரதமர் தனது காதலரை நிச்சயதார்த்தம் செய்தார் !

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா அர்டேர்னுக்கும் அவரது நீண்ட நாள் காதலரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான கிளார்க் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைப்பவமொன்றில் இருவரும் வைர மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.குழந்தைக்கு நெவி தி அரோஹா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2 ஆவது பிரதமர் என்ற பெருமையை பெற்றார் ஜசிந்தா. இதற்கு முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.

நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் தாக்குதலில், தாக்குதல் நடந்த சமயத்தில் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ஜசிந்தாவின் நடவடிக்கைகள் நாடு கடந்து

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!