சஹ்ரான் குழுவின் 7 பில்லியன் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 7 பில்லியன் ரூபா சொத்துக்களையும், 140 மில்லியன் ரூபா பணத்தையும் முடக்கி வைப்பதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.

இந்த சொத்துக்களில், ஷங்ரி-லா தற்கொலைக் குண்டுதாரி மொகமட் இல்ஹாமுக்குச் சொந்தமான, வெல்லம்பிட்டியவில் உள்ள செப்பு தொழிற்சாலை, தெமட்டகொட ஆடம்பர வீடு, பல்வேறு காணிகள் என்பனவும் உள்ளடங்கியுள்ளன.

மேலும், தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் பணம், நகைகள், இரத்தினக் கற்கள், ஏனைய பெறுமதி வாய்ந்த சொத்துக்களும் இருந்துள்ளன என்று விசாரணைகளில் கணடறியப்பட்டுள்ளது.

பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர்கள், தற்கொலைக் குண்டுதாரிகள் வைத்திருந்துள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!