பயங்கரவாதிகளைக் காப்பாற்றும் நீதிபதிகள்- வெடித்தது சர்ச்சை!

பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ள நீதிபதிகள் குறித்து ஏற்கனவே சட்டத்தரணிகள் சங்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தாக்குதல் நடந்த பின்னர் மீண்டும் இது தொடர்பில் தான் அம்பலப்படுத்தியதாகவும் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார். தான் தெரிவித்த தகவல்களை நீதி அமைச்சருக்கும் தொடர்புள்ள ஏனைய தரப்பினருக்கும் அறிவிக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பயங்கரவாதிகளுடன் சில நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாக மேல் மாகாண ஆளுநர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு நீதி அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்ததோடு தனக்கு இது பற்றி அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஆளுநர், தேசிய தௌஹீத ஜமாத் பள்ளிவாசல் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்த போது வாழைச்சேனை நீதிவான் ஒருவர் பக்கசார்பாக செயற்பட்டார். இது தொடர்பில் பொதுமக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தில் முறையிட்டிருந்தார்கள். இவர் பயங்கரவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டது குறித்து தாக்குதலுக்கு முன்னரே தகவல் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் முன்கூட்டி அறிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!