நான்கு வருடத்தில் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி – விமல்

எந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு வருவதை நிறுத்தி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வரும் வழியையே ஏற்படுத்தி இருக்கின்றது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைச்சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அமைதியான சூழல் இருந்துள்ள நிலையிலும் 2009, 2014 காலப்பகுதியில் இருந்த 9 வீத பொருளாதார அபிவிருத்தியைவிட தற்போது 3.2வீதமாக பொருளாதார அபிவிருத்தி வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!