மைத்­தி­ரி­யின் கொள்கை விளக்க உரை: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதி­ருப்தி!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தி­னம் நிகழ்த்­திய கொள்கை விளக்க உரை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏமாற்­றத்தை வெளி­யிட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் நீண்­ட­கால மற்­றும் உட­ன­டிப் பிரச்­சி­னை­க­ளுக்கு எப்­ப­டித் தீர்வை வழங்­கப் போகின்­றார் என்ற வரை­ப­டமோ அவ­ரது பேச்­சில் தொனிக்­க­வில்லை என்­றும் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். கொள்கை விளக்க உரை மீதான இன்­றைய விவா­தத்­தில் தமது அதி­ருப்­தியை வெளிக்­காட்­ட­வுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது. அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை மீது இன்று விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது.

அத­னைத் தொடர்ந்து வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­லாம் என்ற அடிப்­ப­டை­யில், அதன்­போது கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நிலைப்­பாடு எடுப்­பது என்­பது தொடர்­பில் ஆராய்­வ­தற்கே நேற்­றைய கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை, சபை ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­ன­மா­கவே இன்று விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தால், அதன் மீது வாக்­கெ­டுப்பு நடக்­காது.

இருப்­பி­னும், அரச தலை­வ­ரின் உரை தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் நேற்­றைய கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டது. கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச தலை­வ­ரின் உரை தொடர்­பில் பெரும் ஏமாற்­றத்தை வெளி­யிட்­ட­னர். அர­சி­யல் தீர்வு தொடர்­பில் எது­வுமே அவர் குறிப்­பி­டாமை தொடர்­பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­ட­னர்.

கூட்­ட­மைப்­பின் தலை­மை­யும் அதனை ஏற்­றுக் கொண்­டுள்­ளது.
அரச தலை­வ­ரின் கொள்கை விளக்க உரை­யில் தமிழ் மக்­கள் பிரச்­சி­னையை குறிப்­பி­டப்­ப­டாமை தொடர்­பாக இன்­றைய விவா­தத்­தில் பேசு­மாறு கூட்­ட­மைப்­புத் தலைமை நேற்­றைய கூட்­டத்­தின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­குத் தெரி­வித்­துள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!