நினை­வேந்­த­லின் முதன்­மைச் சுடரை நான் ஏற்­ற­மாட்­டேன்!!

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெ­ற­வுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தில் முதன்மை ஈகச் சுடரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் இருந்து யாரா­வது ஒரு­வர் ஏற்­றட்­டும். நான் ஏற்ற மாட்­டேன். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

பொது அமைப்­புக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல் முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகாண சபை ஒருங்­கி­ணைக்­கும் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தில் முதன்மை ஈகைச் சுடரை போரால் பாதிக்­கப்­பட்ட அல்­லது உற­வு­க­ளைப் பறி­கொ­டுத்த தரப்­புக்­க­ளில் இருந்து யார­வது ஒரு­வர் அதனை ஏற்ற வேண்­டும். முதன்மை ஈகச் சுடரை நான் ஏற்ற மாட்­டேன் என்­பதை உறு­தி­பட தெரி­வித்­துக் கொள்­கி­றேன் – என்­றார்.

இதே­வேளை கூட்­டத்­தில் கலந்து கொண்ட பொது அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் பொதுச் சுடரை யார் ஏற்­று­வது என்­பது தொடர்­பி­லேயே பல பிரச்­ச­னை­கள் உரு­வா­கின்­றன. அந்த விட­யத்­தில் உங்­க­ளின் முடிவு வர­வேற்­கத்­தக்­கது.

அன்­றைய தினம் வடக்கு மாகாண சபை சார்­பாக ஒரு அறி­வித்­தல் உரையை மாகாண முதல்­வர் என்ற ரீதி­யில் நீங்­கள் மேற்­கொள்ள வேண்­டும். அது உல­கத்­துக்கு எமது பிரச்­ச­னை­களை எடுத்­துக் கூறும் உரை­யாக அமைய வேண்­டும் என்று குறிப்­பிட்­ட­னர்.

இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராஜா, முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் உரை­யாற்­று­வது எந்­த­ள­வுக்கு சாத்­தி­யப்­ப­டும் என்று தெரி­ய­வில்லை. அவ்­வா­றான உரை நிகழ்த்­து­வ­தாக இருந்­தால் முதல் நாளே ஊட­கங்­கள் ஊடாக அதை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக இருக்­கும் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!