டக்­ள­ஸூக்கு எதி­ரான மனு ஜூ ன் 6 அன்று விசா­ரணை!!

யாழ்ப்­பா­ணம் நக­ரில் ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் அலு­வ­ல­கம் இயங்­கும் ஸ்ரீதர் கட்­ட­டத்­தின் உரித்தை மீளப் பெற்­றுத் தர வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணம் மாவட்ட நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்ட மனு எதிர்­வ­ரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இரட்­ண­ச­பா­பதி ஸ்ரீதர் உட்­பட 6 பேர் மனு­தா­ரர்­க­ளா­க­வும், ஈ.பி.டி.பி. கட்­சி­யின் செய­லா­ளர் நாய­க­மும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்­தாவை எதிர்­ம­னு­தா­ர­ரா­க­வும் குறிப்­பிட்டு சட்­டத்­த­ரணி கேச­வன் சயந்­த­னால் இந்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

1996ஆம் ஆண்டு நாட்­டில் நில­விய அசா­தா­ரண சூழ்­நி­லை­யைப் பயன்­ப­டுத்தி அனு­மதி எது­வு­மின்­றிச் சட்­ட­வி­ரோ­த­மா­கக் குடி­யே­றிய முத­லா­வது மனு­தா­ரர் கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக வாடகை ஏதும் வழங்­காது ஆத­னத்­தை­யும், கட்­ட­டத்­தை­யும் வைத்­துள்­ளார்.

அத­னால் உரி­மை­யா­ளர்­க­ளான எமக்கு மாதம் ஒன்­றுக்கு 75 ஆயி­ரம் ரூபா வீதம் ஏற்­பட்ட இழப்­பும் அதற்­கு­ரிய வட்­டி­யை­யும் இணைந்து இது­வரை காலத்­துக்­கு­மான இழப்­பீ­டாக 100 மில்­லி­யன் ரூபாவை எதிர்­ம­னு­தா­ரர் வழங்க வேண்­டும். தற்­போது இடம்­பெ­றும் வழக்­குச் செல­வு­டன் கட்­ட­டத்­து­டன் கூடிய ஆத­னத்­தின் உரித்­தை­யும் பெற்­றுத் தர வேண்­டும் என்று மனு­தா­ரர்­கள் கோரி­யுள்­ள­னர்.

இந்த மனுவை எதிர்­வ­ரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி அழைக்­கு­மாறு யாழ்ப்­பாண மாவட்ட நீதி­மன்ற நீப­திப வி.இரா­ம­க­ம­லன் அனு­ம­தித்­தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!