ரோஹிங்கியா அகதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க ஐ.நா தீர்மானம்

பங்களாதேஷிலுள்ள 2.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் அவர்கள் மியான்மர் திரும்புவதற்கான அடையாளச் சான்று அவர்களுக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் இந்த அடையாள அட்டை உதவிகரமாக இருக்கும் என்றும் ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறைக்கு பயந்து சுமார் 7.4 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!