தென் ஆபிரிக்காவில் மீண்டும் எபோலா!!

தென் ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்கத்தினால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது.

தென் ஆபிரிக்க நாடுகளில் 1976 ஆம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய், வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், தென் ஆபிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டில் இறந்த 21 பேரின் உடலைச் சோதனை செய்து பார்த்ததில் எபோலா வைரஸ் பரவி வருகிறது என்று உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நோய்க் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் இரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்பப்படுகின்றது பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!