ஜானக பெரேரா கொலை வழக்கு – இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை

அனுராதபுரவில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில், முதல் எதிரியான சண்முகநாதன் சுதர்சனுக்கு 2014, செப்ரெம்பர் 5ஆம் நாள், அனுராதபுர மேல்நீதிமன்றத்தினால், 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் இரண்டாவது எதிரியான அமீர் உமருக்கு ஆயுள்தண்டனை வழக்கி அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகளால் அவருக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க உடமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!