தலைமைத்துவத்தில் மாற்றம் இல்லை- ஐ.தே.க!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­த­வேண்­டி­ய­தில்லை. இருப்­பி­னும், கட்­சி­யின் முக்­கிய ஐந்து பத­வி­க­ளில் மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைத்­து­வம் முதல் முக்­கிய பத­வி­கள் அனைத்­தி­லும் மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மெனக் கட்­சி­யின் ஒரு தரப்பு, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ வுக்கு எதி­ராகக் கடந்த இரண்டு மாத­கா­ல­மாகப் போர்க்­கொடி உயர்த்தி வந்­தி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பு­களை மேற்­கொள்­ளா­வி­டின் ரணி­லுக்கு எதி­ராகப் பொது எதி­ர­ணி­யால் கொண்டு வரப்­பட்­டி­ருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கப் போவ­தாக, இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பாலித்த ரங்கே பண்­டார மற்­றும் வசந்த சேன­நா­யக்க ஆகி­யோர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

கட்­சி­யின் அனைத்­துப் பத­வி­க­ளி­லும் முழு­மை­யான மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­ப­டு­மெனத் தலைமை அமைச்­சர் ரணில் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­யின் கார­ண­மாகத் தீர்­மா­னத்தை எதிர்த்து ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் அனை­வ­ரும் வாக்­க­ளித்­த­னர்.

கடந்த மூன்று தினங்­க­ளாக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப் ­பட்­டன. மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளின் பிர­கா­ரம் 12 பேர் அடங்­கிய அர­சி­யல் சபை­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­து­டன், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் முக்­கிய பத­வி­க­ளில் மாற்­றங்­கள் மேற்­கொள்ளத் தீர்­மா­னிக்­கப் ­பட்­டது.

தலை­மைப் பத­வி­யில் எவ்­வித மாற்­ற­மும் மேற்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­ய­மில்­லை­யெ­ன­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சி­யின் துணைத் தலை­வர், உப தலை­வர், தவி­சா­ளர், பொதுச் செய­லர் ஆகிய பத­வி­க­ளில் எதிர்­வ­ரும் 30ஆம் திக­திக்­குள் மாற்­றங்­கள் கொண்­டு­வ­ரு­வ­தற்­குத் தீர்­மா­னங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!