ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம்

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம், வரும் ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

நேற்றுக்காலை நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஜூன் 6, மற்றும் 7ஆம் நாள்களில் இந்த விவாதத்தை நடத்தும்படி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்த போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இரண்டு வாரங்களில் கிடைத்து விடும் என்றும் அதன் பின்னர், இந்த விவாதத்தை நடத்தலாம் என்றும் சிறிலங்கா பிரதமர் வலியுறுத்தினார்.

இதையடுத்தே, ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் இந்த விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!