246 போதைப்பொருள் பொதிகளை விழுங்கி கடத்த முயன்ற நபரிற்கு ஏற்பட்ட சோகம்

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில் உயி­ரி­ழந்­துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற இந்த மரணம் தொடர்­பான தக­வல்கள் நேற்று திங்­கட்­கி­ழமை வெளியாகி யுள்ளன. விமானம் மெக்­ஸிக்­கோவின் தலை­ந­க­ரி­லி­ருந்து புறப் பட்டு சிறிது நேரத்தில் அந்­நபர் தன்னால் விழுங்­கப்­பட்ட பொதி­க­ளி­லி­ருந்து கொக்­கெயின் போதைப்பொருள் அள­வுக்­க­தி­க­மாக கசிந்­ததால் மார­டைப்­புக்­குள்­ளாகி உயிரிழந்துள்ளார்.

இத­னை­ய­டுத்து ஜப்­பா­னிய நக­ரான நறி­டா­விற்கு பய­ண­மான அந்த ஏரோ­மெக்­ஸிக்கோ விமானம் மெக்­ஸிக்­கோ­வி­லுள்ள ஹெர்­மொ­ஸிலோ நகர விமான நிலை­யத்தில் அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்­கப்­பட்­டது.

தொடர்ந்து அந்­ந­பரின் உடல் பிரேத பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட­தை­ய­டுத்து நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை வெளியான அறிக்­கையில், அவ­ரது மர­ணத்­திற்கு அவரால் விழுங்­கப்­பட்ட கொக்­கெயின் பொதி­களே காரணம் என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. உடோ என் என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் அந்­நபர் கொலம்­பிய பொகோட்டா நகரிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு புறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!