அரசாங்கம் மக்களுக்குத் தெரியாது மறைமுகத்தொடர்புகளைப் பேணுவது தவறு – சரத் வீரசேகர

அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெரியாமல் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடல், நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இரகசியமாக அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்குத் தெரியாமல் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வது முற்றிலும் தவறானதாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

திருகோணமலை கப்பற்துறை பகுதியில் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றினை சீன முதலீட்டுடன் அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து அந்தத் தொழிற்சாலையை அமைப்பதற்கு 600 ஏக்கர் காணியை வழங்க வேண்டும் என்று சர்வதேச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விடுத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் எனக்கு முழுமையான தகவல்கள் எவையும் தெரியாது. ஆனால் இந்த அரசாங்கம் பொதுமக்களுக்குத் தெரியாமல் வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடல், நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இரகசியமாக அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்குத் தெரியாமல் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வது முற்றிலும் தவறானதாகும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!