கோத்தாய கைது செய்யப்படாதது ஏன்? – அமைச்சரரைக் குழப்பும் கேள்வி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மட்டும் இன்னமும் கைது செய்யப்படாமலிருப்பது ஏன் என்பது தனக்கு புரியவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,“இதற்கான காரணத்தை தட்டிக் கேட்டதால் தான் எல்லோரும் என்னை தூற்ற ஆரம்பித்தனர். இந்த அரசாங்கத்தில் மட்டுமல்ல. கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோதே நான் இவ்விடயத்தை தட்டிக் கேட்டேன். ஆனால், அதற்கான பதில் எனக்கு இன்னும் தெரியவில்லை.

சுயாதீன நீதித்துறையை நிறுவுவதற்காக இந்த அரசாங்கம் ஆகக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாகவே கோத்தாபய ராஜபக்ஷ இன்றும் கைது செய்யப்படாமல் இருக்கின்றார்.

மத்திய வங்கி பிணை முறிவிவகாரத்தையடுத்து இரண்டு மாதங்களுக்குள் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மிக் விமானக் கொள்வனவு மோசடியில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக இரண்டு வருடங்களுக்குப் பின்னரே சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!