‘சிலரது செயற்பாட்டுக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் தண்டிப்பது ஏற்புடையதல்ல’

ஒருசில நபர்களின் நாசக்கார செயற்பாடுகளுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தண்டிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இச் சந்தர்ப்பத்தில் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகள் இன அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தும் விதமாக அமையக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரி போராட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று தமது பதவிகளை இராஜினாமா செய்ததுடன், பாராளுமன்றத்தில் பின் வரிசை உறுப்பினர்களாக இருந்து அரசாங்கத்திற்குத் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என்றும் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தனது டுவிட்டர்பக்க பதிவொன்றின் ஊடாகவே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!