‘முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலகியமை அரசியல் நாடகம்’

அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலகியமை ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நாடகம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா, குற்றஞ்சாட்டப்பட்ட மூவரைத் தவிர பிறிதொருவரை எவரும் பதவி விலக அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதே எமது நோக்கம். தேசியப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளாதவர் இன்று தமது தரப்பினருடன் கூட்டாகப் பதவி விலகியமையால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.

இலங்கையின் தேசிய கொள்கைக்கும், கலாச்சாரத்திற்கும் அப்பாற் செல்லும்போது பிரச்சினைகளே தோற்றம் பெறும். பிரச்சினைகளுக்குத் தீர்வை காண்பதை விடுத்து அரசாங்கம் போலியான அரசியல் நாடகங்களையே அறிமுகப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!