நம்பிக்கையில்லா பிரேரணை – ஜூலை 9, 10 இல் விவாதம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

றிசாத்துக்கு எதிரான பிரேரணை விலக்கம்

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விலக்கிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவியில் இருந்து றிசாத் பதியுதீன் விலகியதை அடுத்தே, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமரும் பதவி விலக வேண்டும்- ஜேவிபி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று, சிறிலங்கா அதிபர், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், முஸ்லிம்கள் என்பதற்காக, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியதில்லை.

ஆனால், அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்ற வகையில் அவர்கள் பதவி விலக வேண்டும். முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!