கச்­சாய் எண்­ணெயின் விலையை அதி­க­ரித்­தது ஈரான்!!

அணு­வா­யு­தப் பர­வல்த் தடை ஒப்­பந்­தத்­தில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்ள நிலை­யில், அது சார்ந்த இழப்­புக்­க­ளைச் சரி­செய்­வ­தற்­காக கச்­சாய் எண்­ணெ­யின் விலையை ஈரான் அதி­க­ரித்தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஒப்­பந்த முறிப்­பைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­வால் ஈரான் மீது பொரு­ளா­தா­ரத் தடை­கள் விதிக்­கப்­ப­ட­லாம். அவ்­வா­றான பொரு­ளா­தா­ரத் தடை­களைச் சரி­செய்­வ­தற்கு ஈரான் தனது மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வள­மான கச்­சாய் எண்­ணெ­யின் விலையை அதி­க­ரித்­தே­யாக வேண்­டும் என்ற கட்­டா­யம் உள்­ளது.

ஈரா­னின் முன்­னாள் உள்ள மிகப்­பெ­ரிய தெரி­வும் அது­வே­தான். ஈரா­னும் அதையே செய்­துள்­ளது. அமெ­ரிக்கா ஒப்­பந்­தத்­தில் இருந்து வில­கிய ஒரே தினத்­தில் 3 சத­வீ­தத்­தால் கச்­சாய் எண்­ணெ­யின் விலையை அதி­க­ரித்­தது ஈரான். பீப்­பாய்க்கு 80 டொலர்­கள் வரை­யில் எண்­ணெ­யின் விலையை ஈரான் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஈரா­னி­டம் இருந்து இந்­தியா மட்­டும் நாளுக்கு சுமார் 3 லட்­சம் பீப்­பாய் கச்­சாய் எண்­ணெயை இறக்­கு­மதி செய்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!