நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமை மறுசீரமைக்கப்படுதலே பொருத்தம்!!

இன்­றைய அர­சி­ய­ல­ரங்­கில் நாட்டு மக்­க­ளால் பெரு­ம­ள­வில் பேசப்­ப­டு­மொரு விஷ­யம்­தான் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் பத­வியை ஒழிப்­ப­தென்­ப­தா­கும். இந்த முறைமை ஒரு சர்­வ­ாதி­கா­ரத் தன்மை கொண்­ட­தெ­னக் கரு­தப்­ப­டு­மா­னால், மேற்­கு­லக வல்­ல­ர­சான அமெ­ரிக்­கா­வில் இன்­றும் நடை­மு­றை­யி­லி­ருப்­பது இதே அர­சி­யல் தலை­வர் நடை­மு­றையே என்­பதை நாம் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் இந்த நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் நடை­முறை கடந்த 229ஆண்­டு­க­ளாக நடை­மு­றை­யி­லி­ருந்து வரு­கி­றது. இந்த நடை­முறை பொருத்­த­மற்­ற­ தொன்­றா­னால், அமெ­ரிக்­கா­வில் இத்­தனை ஆண்­டு­க­ளாக அதற்­கெ­தி­ராக ஏன் எதிர்ப்பு உரு­வா­க­வில்லை? அத்­தோடு வேறு­சில நாடு­க­ளும், இப்­போது தமது நாடு­க­ளில் நடை­மு­றை­யி­லி­ருக்­கும் ‘வெஸ்­மி­னிஸ்­டர் முறை’ யிலி­ருந்து மாறி நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள அரச தலை­வர் நடை­மு­றை­மைக்குத் தம்மை மாற்றிக்கொள்ள வி­ரும்­பு­கின்­ற­னவே?

‘வெஸ்­மி­னிஸ்­டர் முறை’ என்­பது பிரித்­தா­னி­யா­ வின் அரச நிர்­வா­கத்தை ஒரு ‘குடி­ய­ரசு’ மாதி­ரிக்கு விஸ்­த­ரிக்­கும் முறைமை ஆகும். நாட்­டில் அர­ச­ரென்ற ஒரு­வ­ரே­யில்­லாத நிலை­யில், ஏன் பெய­ர­ள­வில் ஒரு அரச தலை­வர் பத­வி­யைப் பேண நாம் எதற்­காக கோடிக்­க­ணக்­கில் பணம் செல­விட வேண்­டும்?

நிறைவேற்று அதிகார நடைமுறையுள்ள எந்தவொரு நாட்டிலும் அதற்கு எதிர்ப்பு உருவானது கிடையாது

அந்த வகை­யில், நிறை­வேற்று அரச தலை­வர் நடை­முறை வழக்­கி­லுள்ள, இலங்­கை­யைத் தவிர்ந்த எந்­த­வொரு நாட்­டி­லும் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­து­விட வேண்­டு­மென்ற கோரிக்கை ஏன் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்­பது குறித்து ஆராய்­தல் பொருத்­த­மா­கும்.

1978ஆம் ஆண்­டில் உரு­வாக்­கப்­பட்ட அர­ச­மைப்­பில் காணப்­ப­டும் பல­வீ­னங்­களை, நிறை­வேற்று அரச தலை­வர் பத­வி­யின் பல­வீ­னங்­க­ளென தவ­றாக எடை­போ­டப்­பட்­ட­மையே இதற்­கான பதி­லா­கும். எனவே 1978ஆம் ஆண்­டின் அர­ச­ மைப்­பி­லுள்ள பல­வீ­னங்­கள் எவை என அடை­யா­ளம் காண­மு­யல்­வது பொருத்­த­மா­ன­தா­கும்.

எங்­கள் நாட்­டின் அரச தலை­வர் பத­வி­தான் , இந்த உல­கத்­தி­லேயே அதிக அதி­கா­ரம்­மிக்க அரச தலை­வர் பதவி என்ற நம்­பிக்­கை­யொன்று எம்­ம­வர்­கள் மத்­தி­யில் உண்டு. இருப்­பி­னும், அமெ­ரிக்க அரச தலை­வர் பதவி அத­னை­விட அதி­கா­ரம் கொண்­ட­தொன்று. இற்கு இரு உதா­ர­ணங்­க­ளைக் குறிப்­பிட்­டுக் காட்ட இய­லும். இலங்­கை­யின் அரச தலை­வர், நாட்டு மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்ட 225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­லி­ருந்­து­தான் அமைச்­சர்­க­ளைத் தெரிவு செய்ய முடி­யும் என்ற அள­வுக்கு, அரச தலை­வ­ரது அதி­கா­ரம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆனால் அமெ­ரிக்­கா­வின் அரச தலை­வர் விரும்­பி­னால், நாட்­டின் எந்­த­வொரு குடி­ம­க­னை­யும் அமைச்­ச­ராக நிய­மிக்க இய­லும்.

இலங்கை அரசமைப்பில் அரச தலைவருக்கு
சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது

இலங்­கை­யின் அரச தலை­வ­ருக்கு சட்­ட­மி­யற்­று­வ­தில் எது­வி­த­மான அதி­கா­ரங்­க­ளு­மில்லை. நாடா­ளு­மன்­றத்­தி­னால் நிறை­வேற்­றப்­ப­டும் எந்­த­வொரு சட்­ட­மூ­லத்­தி­லும் சபா­நா­யகர் கையெ­ழுத்­திட்­ட­வு­டன் அது சட்­ட­மா­கி­வி­டும். இதற்கு மாறாக அமெ­ரிக்­கா­வில் அதற்கான சபையில் நிறைவேற்றப்பட்டதொரு சட்டமூலம், அரச தலை­வர் அதில் கையொப்­ப­மிட்­டால் மட்­டுமே சட்­ட­மாக அனு­ம­திக்­கப்­ப­டும்.

அமெ­ரிக்க அதி­பர் ஒரு சட்­ட­மூ­லத்தை நிரா­க­ ரிக்­கி­றா­ரா­யின், அது அமெ­ரிக்க காங்­கி­ர­ஸி­னா­லும், அமெ­ரிக்க ‘செனட்’ சபை­யி­னா­லும் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வு­டன் நிறை­வேற்­றப்­பட்­டால் மட்­டுமே சட்­ட­மாக வாய்ப்புண்டு.

அமெ­ரிக்­கா­வின் அரச தலை­வ­ருக்­கெ­தி­ராக எந்­த­வொரு பரப்­புரை நட­வ­டிக்­கை­க­ளி­லும் எவ­ரும் ஈடு­ப­டு­வ­தில்லை. அந்த நாட்­டின் அர­ச­மைப்­பில் அரச தலை­வ­ருக்கு மதிப்பு அளிக்­கும் வகை­யி­லான சட்ட ஏற்­பாடு உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தால், அமெ­ரிக்க அரச தலை­வர் பதவி உல­கில் அதி­ கூ­டிய அதி­கா­ரம் கொண்ட பத­வி­யாக ஆக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யின் அரச தலை­வ­ரும் தமது செயற்­பா­டு­கள் குறித்து எத்­த­கைய வியாக்­கி­யா­னமோ, விளக்­கமோ எவ­ருக்­கும் கொடுக்­கத் தேவை­யில்லை. ஆத­லால் அவரிடம் எவ­ரும் அவ­ரது முடி­வு­கள் குறித்து கேள்வி எழுப்ப இய­லாது. இந்த நில­மை­தான் இலங்கை அரச தலை­வ­ரைக் கடி­ன­மான முடி­வு­களை எடுக்க வலி­யு­றுத்­து­கி­றது.

ஆனால் அமெ­ரிக்க அதி­பர், அந்த நாட்­டின் செனட் சபைக்கு, பதில் கூ­ற­வேண்­டிய கடப்­பாட்­டைக் கொண்­டுள்­ளார். அமெ­ரிக்­கா­வின் பிர­பல அரச தலை­வர்­க­ளான ஆபி­ர­காம் லிங்­கன், வூட்ரோ வில்­சன், கெரால்ட் போர்ட் போன்­ற­வர்­கள் எடுத்த சில முடி­வு­க­ளுக்கு அமெ­ரிக்க செனட் சபை சவால் விடுத்­த­மை­யும் வர­லாற்­றுப் பதி­வு­கள்.

நிறைவேற்று அதிகார முறைமை ஒழிக்கப்படுமென அரச தலைவர்
கூறினாலும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை

ஆனால் இலங்­கை­யின் அரச தலை­வ­ருக்கு சட்­ட­ரீ­தி­யான ஆணை­மூ­ல­மான கட்­டுப்­பாடு எது­வும் விதிக்­கப்­ப­ட­ வில்லை. அவர் பிரிட்டன் மகா­ராணி அனு­ப­வித்த அந்­தஸ்­துக்­களை அனு­ப­விக்­கி­றார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த முறை­மையை இல்­லா­தொ­ழிக்­கப் போவ­தாகக் கூறி­னா­லும், அவர் அவ்­வி­தம் செயற்­ப­ட­வில்லை. அர­ச­மைப்­புக்­கான 19வது திருத்­தத்­தின்­படி, அரச தலை­வ­ருக்­கு­ரிய விசேட அதி­கா­ரம் ஒழிக்­கப்­ப­டு­வ­தாக தவ­றா­ன­தொரு கருத்து நில­வு­கி­றது.

அரச தலை­வ­ரைப் பொறுப்­புக்­கூ­றும்படி, மனித உரி­மை­கள் மனு ஊடாக கோர­மு­டி­யு­மென மேல்­நீ­தி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது. ‘19ஏ’ திருத்­தம் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரே­யொரு திருத்­தம், அரச தலை­வ­ரது விசேட அதி­கா­ரம் அரச சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக அமைய வேண்­டு­மெ­னவே குறிப்­பிடுகிறது.

அரச தலை­வ­ருக்­கெ­தி­ராக குடி­சார் மற்­றும் குற்­ற­வி­யல் சட்ட நட­வ­டிக்­கை­கள் எத­னை­யும் எடுக்க இய­லாது. அரச தலை­வ­ரி­ட­மி­ருந்து அவ­ரது மனைவி விவா­க­ரத்து பெற­வி­ரும்­பி­னால்கூட, அவ­ரது மனைவி, அரச தலை­வ­ரின் பத­விக் கா­லம் முடி­யும் வரை காத்­தி­ருக்க வேண்­டும். ஒரு அரச தலை­வர், தான் பத­வி­யி­லி­ருந்த காலத்­தில் எடுத்த எந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கெ­தி­ராக அவர் பத­வியை விட்டு வில­கி­விட்ட நிலை­யில்­கூட எது­வி­த­மான சட்­ட­ந­ட­வ­டிக்­கை­க­ளை­யும் மேற்­கொள்ள முடி­யாது.

அமைச்­சர்­க­ளது அதி­கா­ரங்­க­ளுக்கு உச்ச வரம்­பொன்று உள்­ளமை போன்று குறைந்த வரம்பு என்று ஒன்­றில்லை. அரச தலை­வர் விரும்­பி­னால், சகல அமைச்­சுக்­க­ளை­யும் தன்­னு­டைய அதி­கா­ரத்­தின் கீழ் கொண்­டு­வர முடி­யும். ஆனால் இது­வரை எவ­ரும் அந்த தவற்­றைச் செய்­ய­வில்லை.

அரசமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அரச தலைவரது
அதிகாரங்களாகக் குறைந்தன

1978ஆம் ஆண்­டில் உரு­வாக்­கப்­பட்ட அர­ச­மைப்­பின்­படி அரச தலை­வ­ருக்கு குறித்­தொ­துக்­கப்­பட்ட அதி­கா­ரங்­கள், அதன்­பி­றகு மேற்­கொள்­ளப்­பட்ட அர­ச­மைப்­புக்­கான திருத்­தங்­க­ளால் குறைக்­கப்­பட்­டன. அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­த­மா­னது அரச தலை­வ­ரு­டைய அதி­கா­ரங்­களை, மாகாண அமைச்­ச­ர­வை­க­ளுக்கு 36 விஷ­யங்­கள் தொடர்­பாக மாற்­றிக் கொடுத்­துள்­ளது.

சில சிறப்பான சந்­தர்ப்­பங்­க­ளில் மட்­டுமே, அரச தலை­வர் ஆளு­நர்­க­ளூ­டாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களைப் பயன்படுத்தலாம். அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தம் அரச தலை­வ­ரின் அதி­கா­ரங்­களை மேலும் குறைத்­துள்­ளது. இந்தத் திருத்­தத்­தின் மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட அர­ச­மைப்­புச்­சபை, தலைமை நீதி­பதி, சட்­டமா அதி­பர் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் போன்ற பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்­க­ளின்போது அரச தலை­வ­ருக்கு பரிந்­துரை செய்­யும் அதி­கா­ரத்­தைக் கொண்­டுள்­ளது.

இவற்­றைப் பார்க்கும்போது, ஒரு விஷ­யம் தெட்­டத் தௌிவாக விளங்­கு­கி­றது. இலங்­கை­யி­லுள்ள பிரச்­சினை என்­ன­வென்­றால், அர­ச­மைப்­பில் அரச தலை­வரைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய ஏற்­பா­டு­கள் இல்­லா­மை­தான்.

ஆகவே இப்­போ­தைய தேவை அரச தலை­வ­ரின் அதி­கா­ரத்தை இல்­லா­மற் செய்­வ­தல்ல. அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்­றும் ரஷ்யா போன்ற நாடு­க­ளின் அர­ச­மைப்­புக்­கள் குறித்து நன்­றாக ஆராய்ந்­த­றிந்து கொண்டு, இலங்­கை­யின் அரச தலை­வ­ரது அதி­கா­ரங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அவற்றை மறு சீர­மைப்­புக்கு உட்­ப­டுத்­து­வ­து­தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!