தெரிவுக்குழு முன்பாக பூஜித, ஹேமசிறி இன்று சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, சாட்சியமளிக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ள விசாரணைகளில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்குமாறு, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடந்த போது பதவியில் இருந்த காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்ற அமர்வு நாள் என்பதால் இன்றைய தெரிவுக்குழு விசாரணைகள் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட வாய்ப்பில்லை என, தெரிவுக்குழுவின் பதில் தலைவர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் தெரிவுக்குழு முன்பாக, தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக சில்வா சாட்சியம் அளித்திருந்தார்.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சாட்சியமளிக்க முன்வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!