மகா சங்கத்தினரின் கோரிக்கை அடிப்படைவாதிகளுக்கு பலத்த அடியாகும் – ஹக்கீம்

மகாசங்க சபை தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை அவர்களுக்கு எடுத்துரைக்க விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இக் கோரிக்கையானது அனைத்து அடிப்படைவாதிகளுக்கும் பலத்த அடியாகும் எனவும் குறிப்பிட்டார்.

எமது அமைச்சர் ஒருவருக்கும் பதவி விலகிய எமது ஆளுநர்களுக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம். இந் நிலையில் அதுதொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வு தினணைக்களம் ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தெரிவித்திருக்கின்றது.

எமது கோரிக்கையாக இருந்ததும், அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்டு அதன் தீர்வினை விரைவாக வழங்கவேண்டும் என்பதாகும்.

ஏனெனில் இந்த அமைச்சர்கள் ஆளுநர்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய வன்முறைக்கு முகம்கொடுக்கும் அபாயநிலை நாட்டுக்குள் இருப்பதுதொடர்பாக நாங்கள் யாரும் இந்தசபையில் அவதானம் செலுத்தவேண்டி இருக்கின்றோம்.

அத்துடன் இதுதொடர்பாக மகாசங்கசபை தலைவர்கள் அவதானம் செலுத்தி இருப்பதையிட்டு நாங்கள் நன்றிகூறவேண்டி இருக்கின்றோம் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!