பிரதமரின் ஆலோசனைக்கமையவே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்! பெரியசாமி பிரதீபன்

பிரதமரின் ஆலோசனைக்கமையவே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். பிரதமரையே சந்தித்த பின் தான் இவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்த பதவி விலகளின் மூலம் நாட்டில் முஸ்லிம் மக்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்பதை உலகுக் காட்டி விட்டு அமெரிக்காவுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்காக இந்த அரசியல் நாடகம் அரகேற்றப்பட்டதா? என்ற சந்தேகம் தோன்றுவதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பணிமனையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் சர்வதேசத்திற்கு இந்த நாட்டினுள் நுழைவதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். இதனை வைத்து கொண்டு சர்வதேசம் எமது நாட்டினுள் நுழைவதற்க்கு இது ஒரு காரணமாக அமையும் அத்தோடு அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலினை கொண்டு வருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கவே பிரதமர் முயற்சிக்கின்றாரா? என்ற சந்தேகம் தோன்றுகிறது .

அத்தோடு எதிர்வருத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் முழு வாக்குகளையும் பறிப்பதற்கானகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டடிருப்பதாகவும் எனவே இது குறித்து முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்த அவர் இன்று முஸ்லிம் அமைச்சர்களுக்கு முஸ்லிம்கள் மாத்திரம் வாக்களிக்கவில்லை இதில் சிங்களவர்கள் தமிழர்கள் என அனைவரும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் பதவி விலகலானது ஒரு தன்னிச்சையான செயப்பாடு. அதே நேரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவு வழற்குவதாகவே அது அமைந்து விடுவதுடன் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தயிலும் இன விரிசலை இது மேலும் வலுப்படுத்தும்.

இது போன்று சிங்கள அமைச்ர்கள் அல்லது தமிழ் அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் முழு பேரும் பதவி விலகினால் இந்த நாட்டுக்கு நடக்கப்போகும் நிலை என்ன? மக்களின் நிலை என்ன? என கேள்வியினையும் அவர் எழுப்பியதுடன் இந்த நாட்டில் அடிக்கடி தேர்தல் வைக்க முடியாத காரணத்தினால் ஜனாதிபதி இந்த விடயத்தில் நன்கு சிந்தித்து மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படாத வகையில் சகலரையும் கொண்ட ஒரு தேசிய அரசாங்த்தினை தேர்தல் காலம் வரை கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!