கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் விற்கப்படாது – சிறிலங்கா அரசு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கோ, ஜப்பானுக்கோ மாத்திரமன்றி, எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஜேவிபி உறுப்பினர் அனுரகுமார திசநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு, துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சின் சார்பில் இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சரான சாகல ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றம் வராத நிலையில், அவரது பதில் அடங்கிய அறிக்கையை, அமைச்சர் கயந்த கருணாதிலக வாசித்தார்.

“கிழக்கு கொள்கலன் முனையத்தின் 100 வீத உரிமையையும், சிறிலங்கா அரசாங்கமே கொண்டிருக்கும்.

ஜப்பானும் சீனாவும், இதனை அபிவிருத்தி செய்வதற்கான கடன்களை வழங்கும் கூட்டு முயற்சியாளர்களாக இருக்கும்.

இந்தக் கூட்டு முயற்சியில் 51 வீத பங்குகளை சிறிலங்கா கொண்டிருக்கும்.” என்றும் அந்தப் பதிலில் கூறப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் பதில் தமக்குத் திருப்பதியளிக்கவில்லை என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க நேரில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!