தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவினால் கையளிக்கப்பட்டது,

இதையடுத்து, அவர், நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, இருந்த சிசிர மென்டிஸ், பதவி விலகியதை அடுத்தே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் 1984ஆம் ஆண்டு இணைந்த மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, விசாரிக்கும் தெரிவுக்குழு முன்பாக, சாட்சியம் அளித்ததை அடுத்து, சிசிர மென்டிசை பதவியில் இருந்து விலக சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!