மைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும்.

தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கமாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குண்டு தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து தீர்வு காண வேண்டும். ஆனால் நடைமுறையில் இத்தன்மை காணப்படுகின்றதா என்பது சந்தேகமே. கடந்த காலங்களில் எவ்வாறு இரு அரசியல் தலைவர்களும் முரண்பட்டுக் கொண்டார்களோ அதன் தொடர்ச்சியே இன்றும் காணப்படுகின்றது.

பொதுத்தேர்தல், அல்லது ஜனாதிபதி தேர்தலின் ஊடாக நெருக்கடிகளை எதிர்க் கொள்ளலாம் என்று குறிப்பிடுவது பொருத்தமற்றது. தற்போதைய நிலைமையினை எத்தரப்பினரும் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது முறையற்றதாகும். கடந்த அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சி காலத்தில் கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் தண்டிக்கவில்லை. நடப்பு அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் தண்டிக்கவில்லை.

தற்போது இந்த அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது என்அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!