எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரவைத்து விட்டார்கள்!- புலம்பிய விஜேதாச ராஜபக்ஷ

தன்னுடன் கலந்து பேசாமல் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி வரிசையில் தனக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 51 நாட்கள் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரேயே தனக்கு எதிர்க்கட்சி ஆசனம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசனம் வழங்குவதற்கு முன்னர் தன்னிடம் அது தொடர்பில் கருத்துக்கள் கேட்கப்படவில்லை எனவும் அது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனவும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் தான் ஆராயவில்லை எனவும், முறைப்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும், எந்த பகுதியில் இருந்தாலும் தனது வேலையை சரியாக செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!