சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலஅதிர்வினால் சிறிலங்காவில் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் அனுஷ வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் கரையோரத்துக்கு அப்பால், இன்று காலை 7.5 றிச்டர் அளவுள்ள நிலஅதிர்வு ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 220 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்தது.

இந்த நிலஅதிர்வினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பசுபிக் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலஅதிர்வு இந்தோனேசியாவின் கிழக்கு திமோர் தலைநகர் திலி மற்றும் பாலி தீவு ஆகிய இடங்களிலும், உணரப்பட்டது. உடனடி சேத விபரங்கள் வெளியாகவில்லை.

அவுஸ்ரேலியாவின் டார்வின் நகரிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!