பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலியான விவகாரம் குறித்த பொதுநல வழக்கு!

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது குறித்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய பீகார் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். இதுகுறித்து மனோகர் பிரதாப், சன்ப்ரீத் சிங் அஜ்மானி என்ற இரு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில் மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க, உடனடியாக மருத்துவ நிபுணர்கள் அடங்கியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ((B R Gavai)) ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 7 நாட்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய பீகார் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 10 நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!