கடும் வறட்சி – வடக்கில் மோசமான பாதிப்பு!

கடும் வறட்சியான காலநிலையினால், 4 இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வறட்சியினால் வட மாகாணமே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 21,078 குடும்பங்களைச் சேர்ந்த 70,595 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 22,513 குடும்பங்களைச் சேர்ந்த 74,435 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 13,427 குடும்பங்களைச் சேர்ந்த 45,773 பேரும் குருநாகல் மாவட்டத்தில் 5194 குடும்பங்களைச் சேர்ந்த 16,720 பேரும் மன்னார் மாவட்டத்தில் 18,074 குடும்பங்களைச் சேர்ந்த 63,115 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 5,299 குடும்பங்களைச் சேர்ந்த 18,850 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,766 குடும்பங்களைச் சேர்ந்த 40,093 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 4974 குடும்பங்களைச் சேர்ந்த 19,230 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 11,536 குடுமபங்களைச் சேர்ந்த 69,957 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 2459 குடும்பங்களைச் சேர்ந்த 8121 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்ட உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1,23,771 குடும்பங்களைச் சேர்ந்த 4,50,160 பேர் மொத்தமாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாகும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!