அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவருவதே பிரதமரின் திட்டம் – வாசு

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களிலே, இது சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல். அதனால் இதனை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் இராணுவத்தை இங்கு கொண்டுவருவதே பிரதமரின் திட்டமாக இருந்தது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல இரகசியங்கள் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக குறித்த தாக்குதலை தாங்கள் அறிந்திருக்கவில்லை என ஐ.எஸ். அமைப்பு தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் சவூதியிலிருந்து கைதுசெய்யப்பட்ட மில்ஹான் என்பவர் ஐ,எஸ். அமைப்பிடம் கேட்டுக்கொண்ட வேண்டு கோளுக்கு இணங்கவே ஐ,எஸ். அமைப்பு தாக்குதலை பொறுப்பேற்றிருப்பதாக தகவல்கள் வெளிப்பட்டிருக் கின்றன.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற சில தினங்களிலே, இது சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதல். அதனால் இதனை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் இராணுவத்தை இங்கு கொண்டுவருவதே பிரதமரின் திட்டமாக இருந்தது.

அத்துடன் பொலிஸ்மா அதிபர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக புலனாய்வுத்துறையிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் பிரகாரம் கடந்த ஒருவருடகாலமாக தேடிப்பார்க்க வில்லை. அதனால் அவரை குறித்த பதவியில் இருந்து நீக்க கடந்த ஒருவருடகாலமாக கோரிக்கை விடுத்தபோதும் பிரதமர் அதற்கு தடையாக இருந்தார் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். பொலிஸ்மா அதிபரும் அவருக்கு நெருக்கமான சிலரும் பிரதமரின் கட்டளையின் பிரகாரமே செயற்பட்டுள்ளனர். அதனால்தான் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதியால் நீக்க முடியாமல் பாேயுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஜனாதிபதி சட்டமா அதிபருக்கு கையளித்தபோது, சட்டமா அதிபர் அறிக்கையின் பிரகாரம் பொலிஸ்மா அதிபர் மற்றும் 8பொலிஸ் அதிகாரிக்களுக்கு எதிராக வழக்கு தொடருமாறு தெரிவித்திருக்கின்றார். அத்துடன் பொலிஸ்மா அதிபரை நீக்கவிடாமல் பிரதமர் பாதுகாப்பு வழங்கி இருந்தது உறுதியானால் பிரதமருக்கு எதிராகவும் வழக்கு தொடருமாறு சட்டமா அதிபருக்கு தெரிவிக்கலாம்.

இதேவேளை, பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் இன்னும் வெளிப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் தெரிவித்திருக்கின்றார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!