மரண தண்டனை – வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணிலிடம் அதிருப்தி

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால் வெளிநாட்டுத் தூதுவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் இந்த முடிவு குறித்து, தம்மைச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

அதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றுவதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!