சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 32.83 பில்லியன் டொலர்

சிறிலங்காவுக்கு, 32.83 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சின் நடு ஆண்டு நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே, மொத்த வெளிநாட்டுக் கடன், 32.83 பில்லியன் டொலராக இருந்தது.

அதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாளுக்கும், ஏப்ரல் 30ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், கடனுக்கான கொடுப்பனவாக, 2,331.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

இதில், 1,904.7 மில்லியன் டொலர் கடனாகப் பெறப்பட்ட மூலதனமாகும். 426.8 மில்லியன் டொலர் கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டியாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!