சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும் நோக்கம் இல்லை – அலய்னா

சிறிலங்காவில் அமெரிக்கப் படைத்தளத்தை நிறுவுகின்ற நோக்கமோ, திட்டமோ கிடையாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள சோபா உடன்பாட்டு வரைவை, கொழும்பு ஊடகங்கள் பலவும், வெளியிட்டுள்ள நிலையிலேயே, அவர் தமது கீச்சகப் பதிவு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அப்பட்டமான தவறான தகவல். சிறிலங்காவில் அமெரிக்க தளத்தை நிறுவும், எந்த திட்டமோ, நோக்கமோ கிடையாது.

வருகை படைகள் உடன்பாடு, தொடர்பான பேச்சுக்கள் ஒத்துழைப்பை எளிதாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

எந்தவொரு உடன்பாடும், சிறிலங்காவின் இறையாண்மையை முழுமையாக மதிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!