ஹேமசிறி, பூஜிதவை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும் கைது செய்யுமாறு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமசிங்கவுக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா நேற்று அனுப்பிய கடிதம் ஒன்றிலேயே இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

முன்கூட்டியே தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தலை அடுத்து இன்று ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!