மாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்கரை வீதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள், மாலை ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரிவினால், குற்றவியல் சட்டத்தின் கீழ் திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

நேற்றைய விசாரணைகளின் போது, இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்குத் போதுமான சாட்சியங்கள் இல்லை எனக் கூறி, நீதிவான், மொகமட் ஹம்சா, எதிரிகள் 13 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!