கோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

சிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவைச் சந்திக்க பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, தேனுக விதானகமகே, இந்திக அனுருத்த, பிரியங்கார ஜயரத்ன ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றிருந்தனர்.

இதன் போது, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தம்மை வந்து பார்த்துச் சென்றது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

தற்போது தாம் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், விரைவில் நாடு திரும்பவுள்ளதாகவும், கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவும் அங்கு இருந்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் பரப்புரைச் செயற்பாடுகள் குறித்து கோத்தாபய ராஜபக்சவுடன் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!