பதவி காலத்தை நீடித்துக்கொள்ள ஜனாதிபதி மீண்டும் முயற்சி – ரமேஷ் பதிரண

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் அடுத்த வருடம் ஜுலை மாதம் வரை பதவியில் இருக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்.

19 வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களே என்று உயர்நீதிமன்றம் கடந்த வருடம் வழங்கிய தீர்பினை ஜனாதிபதி மீள நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரணதெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாயலத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் . ஜனாதிபதி தேர்தலையே ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் எதிர்பார்த்துள்ளோம்.

ஆனால் சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு போதும் தயாரில்லை. வருட இறுதியில் நடத்த உத்தேசிக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் முயற்சியினை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!