சீனாவுடன் சுதந்திர வணிக உடன்பாடு – சிறிலங்கா அமைச்சர் பேச்சு

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து, பீஜிங்கில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர், மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோவென்னைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் சீனாவுக்கான சிறிலங்காவின் ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்கியமான வணிக வசதி பிரச்சினைகளை தீர்ப்பது, சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!