பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீராவியடி பிள்ளையாருக்கு தொடங்கியது பொங்கல்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவுக்காக, கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து எடுத்து வரப்பட்ட மடைப்பண்டம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று அதிகாலை நீராவியடியை வந்தடைந்தது.

நீராவியடி மற்றும் கோட்டைக்கேணி ஆலய நிர்வாகத்தினரோடு, முல்லைத்தீவின் பல பகுதிகளிலுமிருந்து வருகை தந்த பக்தர்கள் ஒன்றிணைந்து மடைப்பண்டத்தை நீராவியடிக்கு எடுத்து வந்தனர். நீராவியடிக்கு கொண்டு வரப்பட்ட, மடைப்பண்டங்கள் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பொங்கல் வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் நீராவியடிப் பிள்ளையார் ஆலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிமாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் பொங்கல் விழாவைக் கண்டுகளிக்க வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆலயத்துக்கு பௌத்த பிக்கு ஒருவர் உரிமை கோருவதால், பதற்ற நிலை ஏற்படக் கூடும் என்பதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!