சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச்சென்ற தந்தையை சுட்டுக்கொல்வது தான் மக்களை பாதுகாக்கும் முறையா ? – மஹிந்த கேள்வி

சுகவீனமுற்ற பிள்ளையை பார்க்கச் சென்ற தந்தையை சுட்டுக் கொல்வது தான் இராணுவம் பொது மக்களை பாதுகாக்கும் முறையா ? எனக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூற முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்ததாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுகேகொடை – கோட்டே வீதியில் புத்திஜீவிகள் சங்கத்தின் தொழிற்சங்க தலைமைக் காரியாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!