இலங்கைக்கு ஆபத்தான உடன்படிக்கைகள் எதனையும் அனுமதிக்கமாட்டேன் – சிறிசேன

எனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைளை வெளிநாடுகளுடன் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு துரோகமிழைக்க கூடிய பல உடன்படிக்கைகளில் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது என்ற தகவல் ஊடகங்களில் வெளியாகி வருவதுடன் இது குறித்து பரவலான விவாதம் இடம்பெறுவதாக சிறிசேன தெரிவித்துள்ளார்.

சோபா உடன்படிக்கை குறித்து பேச்சுக்கள் அடிபடுகின்றன,மில்லேனியம் சலஞ் உடன்படிக்கை,நிலம் தொடர்பான உடன்படிக்கை போன்றவை குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என்னை ஜனாதிபதியாக்கியுள்ளீர்கள்,இலங்கைக்கு பொருத்தமற்ற உடன்படிக்கை எதிலும் வெளிநாட்டுடன் கைச்சாத்திடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டேன் என தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!