எந்தவொரு இனவாதமும் இல்லாத ஜனாதிபதி என்றால் மைத்திரியே – அங்கஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போதைவஸ்த்து வியாபாரம் செய்தே யுத்தத்தினை நடத்தினார் என ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தினை எமது தமிழ் மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்தக் கூடிய விடயமாக பார்க்கின்றோம்.

மேலும் இது தொடர்பில் நாங்கள் ஜனாதிபதியிடம் எமது கவலையையும், அதிருப்தியைும் தெரிவித்திருக்கின்றோம். என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான இ.அங்கஜன் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் நாவாலர் காலச்சார மண்படத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் அங்கு தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போதைவஸ்த்து வியாபாரம் செய்தே ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார் என ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தானது, எங்களையும், தமிழ் மக்களையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது. இது சம்பந்மாக நாங்கள் ஜனாதிபதியிடம் எமது கவலையைத் தெரிவித்ததுடன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடமும் எமது ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றோம்.

அத்துடன், ஜனாதிபதி தெரிவத்த கருத்தானது, தமிழ் மக்களின் போராட்டத்தினை கொச்சைப் படுத்தக் கூடிய விடயமாக பார்க்கின்றோம். இருந்தபோதும்,

ஜனாபதி போராட்டத்தனை கொச்சைப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருத்தினை தெரிவித்திருக்க மாட்டார் என்ற முழுமையான நம்பிக்கை எமக்க இருக்கின்றது. ஏனென்றால் எந்தவொரு இனவாதமும் இல்லாத ஜனாதிபதி என்றால் மைத்திரிபால சிறிசேன மட்டும் தான். மூன்று இனத்தை பற்றியும் சிந்தித்து மூன்று இனங்களையும் ஒன்றினைத்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனையுடையவர்.

இந்த வடமாகாணத்திற்கு ஜனநாயகம் வரவேண்டும், முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும், முன்னேற்றம் வர வேண்டும் என போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு தலைவராக மைத்திபால சிறிசோனவை பார்க்கின்றோம். இந்த நிலையில் ஜனாபதி தெரிவித்த கருத்துக்கு நாங்கள் இணக்கமில்லை. அது சம்பந்தமாக ஜனாபதியிடம் எமது ஆட்சேபனையை தெரிவித்திருக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!