பாரிய லாபமீட்டும் நோக்கிலே சீன சிகரட்டுக்கான அனுமதியை கோரினோம் – மங்கள

அரசாங்கத்துக்கு பாரிய லாபமீட்டும் நோக்கிலே சீன சிகரெட்டுக்கு அனுமதிவழங்க வேண்டும் என தெரிவித்தேன். அனுமதி வழங்கப்படாவிட்டாலும் அவ்வாறான சிகரெட்டுகள் நாட்டுக்கு உத்தியோகபூர்வமற்ற முறையில் வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கும் வழி தடைப்படுகின்றது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு வருமானம் ஈட்டும் வழிகளை மேலும் அதிகரிப்பதன்மூலம் அதன் லாபாத்தை மக்களுக்கே பெற்றுக்கொடுக்க முடியும். அதனால்தான் சீன சிகரெட்டுக்கு அனுமதிவழங்க தீர்மானித்தோம்.

அத்துடன் எமது நாட்டில் பாரியளவில் இருப்பதால் சீன சிகரட்டுக்கு நாங்கள் அனுமதி வழங்கினாலும் இல்லாவிட்டாலும் அது உத்தியோகபூர்வமற்ற முறையிலாவது வந்தே தீரும். அதனால் அனுமதி வழங்குவதன் மூலம் அந்த லாபத்தை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று தீவிரபொறுப்பு முகாமைத்துவச் சட்டம் மற்றும் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!